Full 1
இலங்கையில் பீடைநாசினிகள் மற்றும் பசளை வகைகள் பாதுகாப்பாகவும் சரியாகவும் பயன்படுத்தப்படுவதனை ஊக்குவிக்கும் கருத்திட்டம்
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் (JICA) இணைந்து இலங்கை விவசாயத் திணைக்களம் மூலம் செயல்படுத்திய தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டம் (2021–2026)
Full 1
previous arrow
next arrow

திட்டத்தின் விவரம்

திட்டம் பற்றி

இலங்கையில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் பசளைகளை பாதுகாப்பாகவும், சரியான முறையிலும் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் திட்டம் (SAFE திட்டம்), ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) ஆதரவுடன் இலங்கை விவசாயத் திணைக்களம் மூலம் செயல்படுத்தப்பட்டது.

நீண்ட கால அடிப்படையில் விவசாயிகளின் தொழில்சார் பாதுகாப்பை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்தின் மீது ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும், உணவு பாதுகாப்பை உயர்த்தவும், ஏற்றுமதி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் காரணமான பாதுகாப்பான மற்றும் தரமான பயிர் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக, தொடர்புடைய பங்குதார அமைப்புகளின் திறன்களை வலுப்படுத்துவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த திட்டம் 2 கட்டங்களும் 4 விளைவுகளும் கொண்டதாக அமைந்திருந்தது. அதற்குள் சோதனை நடவடிக்கைகள், பணிமனைகள், பயிற்சிகள், பயிற்றுநர் பயிற்சிகள் போன்ற பல இலக்குகள் அடங்கி உள்ளது . இந்த இலக்குகளை வெற்றிகரமாக அடைவதற்காக உதவும் வகையில் விரிவான செயல்திட்டம், தொழில்நுட்ப தொகுப்புகள், பயிற்சி திட்டங்கள் மற்றும் பயிற்சி திட்டங்களுக்கான பல பயிற்சி உதவி கருவிகள் தயாரிக்கப்பட்டன.

எங்களின் பயணம்

திட்டத்தின் கால வரையறை

ஏப்ரல் 2020 - மார்ச் 2021

திட்டமிடல் கட்டம்

விளைவு 1: செயல்படுத்தும் கட்டத்திற்கான விரிவான செயல்திட்டமும் செயல் திட்டமும் தயாரிக்கப்படுகிறது.

ஒக்டோபர் 2023 - மார்ச் 2026

செயல்படுத்தும் கட்டம்

விளைவு 2: பாதுகாப்பான மற்றும் தரமான பயிர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக தொழில்நுட்பம் மற்றும் விரிவாக்கல் (extension) தொகுப்பு உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்படுகின்றது.

விளைவு 3: அரசு மற்றும் தனியார் துறைகள் உட்பட விரிவாக்கல் பணியாளர்கள் மற்றும் விவசாயிகள், தொழில்நுட்பம் மற்றும் விரிவாக்கல் தொகுப்பைப் பயன்படுத்துவதற்காகப் பயிற்சி அளிக்கப்படுவர்.

விளைவு 4: செயல்படுத்தும் கட்டத்தின் மூலம் பெறப்பட்ட அனுபவங்களும் அறிவும் விரிவான செயற்பாட்டு திட்டங்களில் பிரதிபலிக்கப்படுகின்றன.

The project for Promotion of Safe and Appropriate Use of Pesticides and Fertilizers in Sri Lanka

Project Sites